கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்த மாமனார்-மருமகன்: போலீசில் சிக்கியதால் பரபரப்பு

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (08:09 IST)
தூத்துகுடியில் மாமனார் மற்றும் மருமகன் இருவரும் சேர்ந்து 111 பவுன் தங்க நகையை கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டு திருடு போனதாக நாடகமாடியது அம்பல்த்திற்கு வந்துள்ளது.

தூத்துகுடியை சேர்ந்த பால்துரை என்பவர் ஜோசியராக உள்ளார். இவரது வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து 111 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது பால்துரைக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் 111 பவுன் சிக்கியது

இதனையடுத்து போலீசார் விசாரணை செய்தபோது 'திருடர்கள் ஓட்டை பிரித்து தங்களுடைய வீட்டில் நுழைந்தது உண்மைதான் என்றும், ஆனால் திருடர்கள் கையில் பணம், நகை என எதுவும் சிக்கவில்லை என்றும் காலையில் இதனையறிந்த தான், தன்னுடைய மருமகனுடன் சேர்ந்து தங்க நகைகளை கட்டிலுக்கு அடியில் ஒளித்துவைத்துவிட்டு, கொள்ளை போனதாக நாடகமாடியதாகவும் பால்துரை வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து பால்துரை மற்றும் அவருடைய மருமகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்