தூத்துக்குடி மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. கோவை,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மேயர் பதவி தேர்தலில் அதிமுக வேட்பாளர் கிரேஸி வெற்றி பெற்றுள்ளார். அந்தோணி கிரேஸி 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று இருந்தார். பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி 31,708 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.