திருவாரூரை அடுத்து மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:43 IST)
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் நாளை அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
இதேபோல் சென்னை உள்பட மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்