டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (13:23 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. 

 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. 
 
ஆம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், எம்.ரங்கசாமி, கழக பொருளாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.       

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்