இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்று தந்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள்: டிடிவி தினகரன்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:09 IST)
இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்று தந்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று  நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.
 
விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்