உள்ளாட்சி கோதாவில் பேஜாராய் இறங்கிய டிடிவி தினகரன்!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:01 IST)
அமமுக சார்பில் போட்டியிட விண்ணப்பிப்பதற்கான விரும்ப மனுக்கள் வழங்கப்படும் தேதிகளை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் துரோகிகளை தோற்கடிப்பது தான் எங்களின் முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
உள்ளாட்சித் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) சார்பில் போட்டியிட விண்ணப்பிப்பதற்கான விரும்ப மனுக்கள், நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்