14 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மீட்பு பணி:சுர்ஜித்தை மீட்க பேரிடர் மீட்பு குழு விரைவு

Arun Prasath
சனி, 26 அக்டோபர் 2019 (08:29 IST)
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 70 அடிக்கு சென்றுள்ள நிலையில் பேரிடர் மீட்பு குழு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை 5.40 மணி அளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் தவறி விழுந்தத்தை தொடர்ந்து 14 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 129 அடி ஆளமுள்ள கிணற்றில் குழந்தை 70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு மணி நேரத்தில் பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக மூன்று குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை.

குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுவது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்