ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை! – உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

வெள்ளி, 25 அக்டோபர் 2019 (19:08 IST)
தீபாவளிக்கு பட்டாசுகளை ஆன்லைனில் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை களைகட்டிவிடும். அப்படியிருக்க சமீப நாட்களில் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் மக்கள், பட்டாசுகளையும் ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரடி பட்டாசு விற்பன்னர்கள் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆன்லைன் விற்பனையால் உள்ளூர் பட்டாசு வியாபாரம் நஷ்டமாவதை கணக்கில் கொண்டும், சீன பட்டாசுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டு விட வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், ஆன்லைன் பட்டாசு விற்பனை வலைதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்