தென் மாவட்டங்களுக்கு இன்று 60 பேருந்துகள் இயக்க முடிவு செய்த நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயணிகளின் வருகைக்கு ஏற்ப குறைவான பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 18ஆம் தேதி ஆன இன்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் தமிழக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கு ஏற்க இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 60 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்க முடிவு செய்த நிலையில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பயணிகளையும் வருகைக்கேற்றவாறு குறைவான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக தென் மாவட்டங்களில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிலைமையை கண்காணித்து பயணிகள் தேவைக்கு ஏற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.