சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (09:23 IST)
இன்று முதல் ரயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. 
 
இந்நிலையில் செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கவும் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
 
இன்று முதல் ரயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு டிக்கெட் மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்