மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலி அருவி ஆகிய மூன்று அருவிகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.