நாளை காத்திருக்குது கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (13:53 IST)
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளை பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வடகிழக்கு பருவமழை. தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலைஆய்வு மைய தகவலின்படி நாளை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை பெரும்பாலும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்