ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு... இன்று முதல் டோக்கன் விநியோகம்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:44 IST)
பொங்கல் பரிசு தொகுப்பு பெற ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது.

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அல்லது 4 ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். 
 
எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மொத்தமாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க ஒரு நாளைக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது.
 
அதோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணிக்காக நியாய விலைக்கடைகள் அனைத்தும் விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்