தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: நீட், செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (17:43 IST)
முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துதல், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 
இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் அல்லது அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்