இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு ஆரம்பம்: காப்பி அடிப்பதை தடுக்க 6,900 பறக்கும் படைகள்

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (09:30 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன, இன்று தேர்வு தொடங்குவதை அடுத்து கல்விக்கடவுள் சரஸ்வதியை வழிபட்டு மாணவர்கள் தேர்வுக்கு சென்று வருகின்றனர்

இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதுபோக தனித்தேர்வர்கள் 36,649 பேர் எழுதும் இந்த தேர்விற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கினாலும் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்கும் அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும் வழங்கப்படுகிறது. தேர்வை சரியாக 10.15 மணி முதல் 12.45 மணி வரை மாணவர்கள் எழுத அனுமதிக்கப்படுவர்.

இந்த தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காப்பியடிக்கும் மாணவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்