10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (13:09 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை குறைந்திருந்தாலும் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் சிலப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்