வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; டெல்டா மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (08:14 IST)
தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்