தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCo- விற்கு ரூ.5,15 7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.