தமிழகத்திற்கு தடுப்பூசி வாங்க டெண்டர்; ஜூன் 6 அன்று இறுதியாகும்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:19 IST)
தமிழகத்திற்கு தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட நிலையில் டெண்டர் முடிவுகள் ஜூன் 6 அன்று வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் போதாததால் உலகளாவிய டெண்டர் கோரி தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் கொரோனாவால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு வீட்டிற்கே சென்று உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் “தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 550 டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 650 டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி இந்த டெண்டர் இறுதியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்