கொரோனா பரவல் எதிரொலி: பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (19:29 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இதில் பாதிக்கு மேல் சென்னையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது 
 
இந்த நிலையில் அரசு பேருந்து நடத்துநர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் தரக்கூடாது என்றும் இந்த நடைமுறையை அனைத்து நடத்துநர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கட்டுப்பாடு விதித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்