இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே நடந்து வரும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.