பதவியேற்ற சூட்டோடு ப்ரஸ் மீட் - ஆளுநர் பேசியது என்ன?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (11:42 IST)
தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது என புதிதாக பதவியேற்றுக்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி. 
 
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 
 
பதவியேற்றுக்கொண்ட பின்னர், உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி. என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன். தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது.  தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி என பேட்டி அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்