கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (13:35 IST)
கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான மரணம் அடைந்த நிலையில் இதனை அடுத்து வன்முறை வெடித்தது என்பதும் பள்ளி சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்
 
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கனியாமூர் பள்ளியை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்