தமிழக சட்டமன்ற தேர்தல்; மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (08:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளியூரில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ஏப்ரல் 1 முதல் 5 வரை 5 நாட்களுக்கு 2,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர மற்ற நகரங்களில் இருந்து 3,090 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திலும் முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்