தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (20:17 IST)
சமீபத்தில் தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து திமுக உள்பட எதிர்கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர். உடனடியாக தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது
 
தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்றும், தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி 2 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான தகுதியில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகளை குறைந்த பட்ச தகுதியாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய முதல்வர் 2004ம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ், புறக்கணிக்கப்பட்டதாக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்