தலைமை செயலகத்தில் சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (16:28 IST)
காவிரி விவகாரத்தில் தலைமைச் செயலகத்தில் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்படி பழனிச்சாமி அலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 6 வார கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3மாத கால அவகாசம் தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வரும் 9 ஆம் தேது இந்த இரு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்களை எடுத்து வைக்க ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணைமுதல்வர், அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 
 
மேலும், தமிழக செயலாளர் கிரிஜா, வழக்கறிஞர் சேகர்நாப்தே, தலைமை வழக்கறிஞர் கிஜய் நாராயணன் ஆகியோரும், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமனியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்