கஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல்.. 3 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (13:50 IST)
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியதாக பிரேம், ராகுல், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி உமாபதி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கஞ்சா போன்ற போதை பொருட்கள் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
 
நேற்று சென்னை கண்ணகி நகரில்  2 இளைஞர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நடத்த சென்ற போலீசார் மீது, கஞ்சா போதையில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு காவலர்களைக் கஞ்சா வியாபாரி தனது நண்பருடன் சேர்ந்து தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்