திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

Prasanth Karthick
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (15:35 IST)

திருப்பரங்குன்றம் மலையில் உரிமை தொடர்பான விவகாரத்தில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் முருகன் கோயில் இருக்க, மேலே உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோஷத்துடன் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்று திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.

 

இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திருப்பரங்குன்றத்தில் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை தற்போது விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இன்று மாலை 5 முதல் 6 மணிக்கு ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக்கூடாது, கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போராட்டம் முழுவதையும் வீடியோ பதிவாக எடுக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்