ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை: திருமாவளவனின் மனு தள்ளுபடி

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (16:59 IST)
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அந்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு தடை கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் மதநல்லிணக்கத்தை இந்த அணிவகுப்பு குலைக்கும் என்றும் இந்த அமைப்பு மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைப்பு என்றும் காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்ததை அடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது ஆர்எஸ்எஸ் அணி ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அங்கு தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்றும் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்