திருச்செந்தூரில் 10 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தண்ணீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உதாரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர் நெல்லை கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கனமழை கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக திருச்செந்தூரில் கடந்த 10 மணி நேரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு உள்ள முருகன் கோவிலுக்கு தண்ணீர் புகுந்து விட்டதாகவும் அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் நிர்வாகிகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் திருச்செந்தூரில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து பெய்த மழை பெய்து உள்ளது என்பதும் இதுவரை 22 சென்டிமீட்டர் மழை பெய்து இருந்ததாகவும் தெரிகிறது
தூத்துக்குடியிலும் இதேபோன்று 14 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது