நண்பரை காப்பாற்ற சென்ற இளைஞர் ரயில் மோதி பலி...

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:47 IST)
திருவள்ளூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற நண்பரை காப்பாற்றுதற்காக முயற்சி செய்த இளைஞர் ஒருவர் வேகமாக வந்த ரயிலில் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,. சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியை அடுத்துள்ள தாயுமான் செட்டி பகுதியைச் சேர்தவர் அரவிந். இவர் வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்று தெரிகிறது.  இதனால் தான் மிகுந்த மனக் கஷ்டத்தில் இருப்பதாகவும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்யப் போவதாகவும் அவரது நண்பர் வெங்கடேஷ்க்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறார்.
 
தன் நண்பனின் குரல் பதிவைக் கேட்டு ஓடிவந்த வெங்கடேஷ்... பதறியபடி அரவிந்தைக் காப்பாற்றுவதற்காக விரைந்து ஓடினார். பின்னர் திருவாயர் பாடி ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டிருந்த அரவிந் பயத்தில் தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டார். அதனால் உயிர் தப்பித்தார்.
ஆனால் வெங்கடேஷின் கால்கள் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதால் அதிவேகமாக வந்த ரயில் வெங்கடேஷின் மீது மோதியது. நண்பனின் உயிரைக் காப்பாற்ற வந்தவர் மீது ரயில் மோதியதால் அப்பகுதியில் சோகம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்