ஜெயலலிதாவின் ஆவி சிதம்பரத்தைப் போல ஸ்டாலினை பழிவாங்கும் - முதல்வர் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:42 IST)
முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை  அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது அதிமுக கட்சிக்கு பெரும் இழப்பாகக் கருதப்பட்டது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வமும் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று, அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரெட்டியார் பட்டி நாராயணனை சந்தித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்தார்.
 
 அப்போது அவர் கூறியதாவது :
 
’திமுக தொடுத்த வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா உயிரிழந்ததற்குக் காரணமே திமுகவும், ஸ்டாலினும்தான் என நான் பகிரங்கமாக கூறுகிறேன்.

ஆனால் ஜெயலலிதா இறப்புக்கு நாங்கள் கவலைப்படவில்லை என ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது.  ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து பேசிவருகின்ற ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும்  அவர் விமர்சித்துள்ளார்.
 
மேலும்,ஜெயலலிதாவை வசைபாடிய ப. சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கிவிட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா  ஸ்டாலினையும் சும்மா விடாது; நல்லது செய்தால் நல்லது செய்தால் நடக்கும் கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் ! சட்டசபையில் சட்டையை கிழித்துவிட்டு வரும் ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா ? எனத் தெரிவித்துள்ளார். 
 
ஜெயலலிதாவை வசைபாடிய ப. சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கிவிட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா  ஸ்டாலினையும் சும்மா விடாது என்று முதல்வர்  கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்