பொறியாளரை தாக்கிய காவலர்; வலுக்கும் கண்டனங்கள்(வீடியோ இணைப்பு)

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (15:03 IST)
சென்னை மடிப்பாக்கத்தில், வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
சென்னை உள்ளகரம் மதியழகன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். பொறியாளரான இவர் தனியார்  நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனது வீட்டு வாசலில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக வந்த மடிப்பாக்கம் எஸ்.ஐ கார்த்திக்கை வீட்டுக்குள் செல்லும்படி கூறினார். அதற்கு கார்த்திக் மற்றும் அவரின் தாய், எங்க வீட்டுக்கு முன்னாடிதான நின்னு பேசிக்கிட்டிருக்கோம் என்று தன்மையாகக் கூற, அவர்களை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் எஸ்.ஐ. மேலும் கார்த்திக்கை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் கார்த்திக்கின் கையில் காயம் ஏற்பட்டது. 
 
இதனையடுத்து போலீஸார் கடுமையாக நடந்துகொண்டது குறித்து கார்த்தியின் குடும்பத்தினர் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர். அங்கு அவர்களின் புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதனையடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ ஆர்.கே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களைத் தாக்கிய எஸ்.ஐ, ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளார். எஸ்.ஐ-யிடம் கார்த்தி மற்றும் அவரின் தாயார் பேசும் காட்சியை அங்கு நின்றுகொண்டிருந்த கார்த்தியின் நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த பலர், அந்த எஸ்.ஐ யை வருத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்