தமிழகத்தில் நோ பச்சை; ஆரஞ்சுக்கு மாறிய கிருஷ்ணகிரி!!

Webdunia
சனி, 2 மே 2020 (10:37 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மே 3 ஆம் தேதியோடு முடிவதாக இருந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு, கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 15க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 15க்கும் குறைவான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், பாதிப்புகளே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்த ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி தான். தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சற்றும் முன் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்