தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியில் ஆசிரியர்களை ஓட ஓட விரட்டிய மாணவனின் தாய், தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ நம்பிபுரத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பாரத். இவர் நேற்று காலை பள்ளியில் பணியாற்றி வந்தபோது, அப்பள்ளியில், 2 ஆம் வகுப்பு படிக்கும், மாணவரின் பெற்றோர், மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் தங்கள் மகனை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாணவனின் தந்தை, தலைமையாசிரியர் குருவம்மாளை தாக்கியதுடன், ஆசிரியர் பாரத் என்பவரையும் ஓட ஓட விரட்டி அடித்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த நாற்காலிகளையும் உடைத்தனர்.
இதுகுறித்து, தலைமையாசிரியர் போலீஸார் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், எட்டயபுரம் போலீஸார், மாணவனின் தாய் செல்வி, தந்தை, சிவலிங்கம், தாத்தா முனியசாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்த விசாரணையில், மாணவன் வீட்டுப்பாடம் செய்யாததை ஆசிரியர் கண்டித்ததியால், பாரத்தை பெற்றோர் தாக்கியது தெரியவந்துள்ளது.