தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் சிறுவன் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:05 IST)
தமிழ்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய விழுப்புரம் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 21ந் தேதி விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூரைச் சேர்ந்த ஆராயி, தனது மகன் சமயன்(10) மற்றும் மகள் தனத்துடன்(14) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நிழைந்த மர்ம நபர்கள் ஆராயி மற்றும் அவரது மகள் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். அத்தோடு நிறுத்தாமல் தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனை தடுக்க சென்ற சிறுவன் சமயனை அந்த மனித மிருகங்கள் அடித்தே கொன்றுள்ளனர். மேலும் ஆராயி, தனத்தை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
 
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த வழக்கில் தேசிய தாழ்த்தப்பாட்டோர் ஆணையமே நேரடியாக வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர். தில்லைநாதனிடம் நடத்திய விசாரணையில், தனம், ஆராயி, சமயன் ஆகியோர் வீட்டில் தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டுக்குள் புகுந்து அவர்களைத் தாக்கி நகைகளை பறித்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றி தில்லைநாதனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்