இளைஞரின் தலை வெட்டப்பட்ட விவகாரம் : உண்மை நிலவரம் என்ன...?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (16:45 IST)
பெண்களை இழிவு படுத்தும் வகையில் வெற்று கோஷங்கள் எழுப்பிதாக  இளைஞனின் தலையை வெட்டப்பட்டதாக இணயதளத்தில் வெளியான தகவல்கள் உண்மையல்ல என திருவள்ளூர் எஸ்.பி பொன்னி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் 6 ஆம் தேதி நரசிங்க புரத்தி ல் நடைபெற்ற  அம்பேத்கார் நினைவு நாளின் போது அன்பழகன் என்பவர் ஜாதி ரீதியாக பெண்கள் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அன்பழகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் அவர் தலை துண்டிக்கபட்டு கொல்லப்பட்டதாக ஒரு தலையை காட்சி படுத்த இணைய தளத்தில்  வீடியோ பரவி வருகிறது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி கூறியதாவது:
 
துண்டிக்கப்பட்டுள்ள தலை  அன்பழகனுடையது இல்லை : தற்போது இக்குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபபடும் இவ்வாறு தெரிவித்தார்.
 
அன்பழகன் தலை என்று ஊடகம், இணையதளங்களில் பரவி வரும் வீடியோவால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்