தலைச்சுற்றல் வருவதற்கான காரணங்கள்...? செய்ய வேண்டிவை என்ன...?

ஒருவருக்கு தலைச் சுற்றல் என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை தொடர்பான நரம்பு கோளாறாக இருக்குமோ என்பதுதான். ஆனால் அதற்கு முக்கிய காரணம் காதுகள் தான். உடலைச் சமநிலைப்படுத்த உதவும்.
தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் என்றால் அது காதுகள் தான். ஆனால் மற்ற காரணங்களாக ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம்,  குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு, நீரிழிவு, தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சனை,  தைராய்டு பிரச்சனை, கர்ப்பத்தின் ஆரம்பம், இதயத் துடிப்பு கோளாறுகள், மருந்துகள் பக்கவிளைவு, பார்வை கோளாறு, மன அழுத்தம்,  உறக்கமின்மை, தலைக்காயங்கள் என பலவற்றைக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
 
தலைச்சுற்றலுக்கு மாத்திரை மருந்துகள் மட்டும் தீர்வாகாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். கண்களை மூடி கண்களைச்  சுற்றுதல். கழுத்துக்கு பயிற்சி அளித்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் தலைச் சுற்றலைத் தடுக்க உதவும்.
 
தலைச்சுற்றல் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:
 
* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்,
 
* அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
 
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். போதை மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
 
* ஆண்டுக்கு ஒருமுறையாவது காது பரிசோதனை செய்வது அவசியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்