மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்! - த.வா.க வேல்முருகன்!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (11:24 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜக, பாமக, அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அண்ணா பல்கலை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பேசியுள்ளார். “யார் அந்த சார்? என்பது குறித்து ஆளுநர் வாய் திறக்கவில்லை. பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு பல்கலை.யின் வேந்தராக உள்ள ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். தமிழகம் கடந்த 2 வாரங்களில் போராட்ட களமாக மாறியுள்ளது. காவல்துறையும், முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்