உள்ளாட்சி தேர்தல்: பதவியை ஏலம்விட்டால் கடும் நடவடிக்கை!
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:53 IST)
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி எச்சரித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒருசில ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் தற்போது அமைச்சர் ரகுபதி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் முதல்வரின் சாதனைகள் கிராமம் வரை சென்று உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக திமுக வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்