சொந்த ஊருக்கு நிம்மதியா பயணிக்க முடியும் நாள்தான் பண்டிகை நாள்! – தங்கர் பச்சான்!

J.Durai
செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:57 IST)
பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் அதுகுறித்து இயக்குனர் தங்கர் பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து அறிக்கையில் “நகரங்களுக்கும்,பெருநகரங்களுக்கும்,பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பொருளாதாரம் தேடி வாழ்வை தேடிக்கொண்ட என்னைப் போன்றவர்கள் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பிறந்த மண்ணில் உறவினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புகின்றனர்.

இவ்வாறான நாட்களில் பொதுப் பேருந்தில் இடம் பிடித்து நின்று கொண்டே பயணம் செய்து ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பிய நாட்களை என்னால் மறக்க இயலாது! சொந்த ஊர்திகளில் குடும்பத்தினருடன் பிறந்த ஊர் சென்று திரும்பும் வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத  நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.

அரசின் நிதி நிலை அறிந்து உடனே தொழிற்சங்கங்களும் இணக்கமான முடிவை எட்டுவதற்கு முன் வர வேண்டும்.

ALSO READ: கூடுதலாக, ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
 
ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஏற்கனவே கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சொகுசு பேருந்துகள் எவ்வாறெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

சொந்த ஊரில் பண்டிகை நாட்களைக் கொண்டாட மக்கள் என்றைக்கு மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் உண்மையான கொண்டாட்ட நாட்கள்!!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்