காமெடி நடிகர் பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:19 IST)
பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. 
 
சென்னை சூளைமேட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருபவர் பாலாஜி. திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸி ஆக இருக்கும் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 


 

 
இதனைத் தொடர்ந்து பாலாஜி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் அதிகமானதே உடல் நலக்குறைவுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சொந்த பிரச்சனை காரணமாக தூக்க மாத்திரைகளை  விழுங்கி, பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவி வருகின்றன. 
 
இது குறித்து வாட்ஸ் அப்பில் விளக்கம் அளித்துள்ள பாலாஜி, தான் நலமுடன் இருப்பதாகவும் மேற்கண்ட வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.