பாஜக விளம்பரங்கள் இரவோடு, இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (23:43 IST)
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பி.ஜி.ஆர். எனர்ஜி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து சுமார் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதும், முறைகேடு செய்துள்ளதும் ஆதரப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

இந்நிலையில், இந்த கரூர் சுவர் விளம்பரம் தகராறில், பாஜக பிரமுகர்களை தாக்கிய திமுக வினரிடையே செல்போன் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாகவும், இந்த விஷயத்தினை சும்மா விடாதீங்க, இதனை விட்டால் நாம் முன்னேற முடியாது என்றும் கூறியுள்ளதாகவும், ஏற்கனவே தமிழக அளவில் சாலை போடாமலேயே தார்சாலை போட்ட விவகாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் மனம் குளிரவைக்க வேண்டுமானால், கரூரில் ஏதேனும் பொதுக்கூட்டம் அல்லது சிறப்பான சம்பவம் செய்ய வேண்டுமென்றும் கூறியதாக கூறப்படுகின்றது.

இதனால் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த சுவர் விளம்பரம் மட்டுமில்லாமல், கரூர் வேம்புமாரியம்மன் ஆலயத்தின் அருகே உள்ள பசுபதிபுரம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவர் பாஜக விளம்பரங்கள் ஆகியவை இரவோடு, இரவாக அழிக்கப்பட்டும், காவல்துறை இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே கூறுகின்றனர் நடுநிலையாளர்கள்.,
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்