அமைச்சர் பாண்டியராஜனை பழமொழி சொல்லி கலாய்த்த திமுக பிரமுகர்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (21:22 IST)
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள புராதன கோயில்களை கைப்பற்றப் போவதாக வந்த செய்தியை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது: மத்திய தொல்லியல் துறை மீது முக ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் புராதனச் சின்னங்கள் குறித்து அவருக்கு போதிய புரிதல் இல்லை என்றும் கூறியுள்ளார் 
 
மாபா பாண்டியராஜனின் இந்த கருத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எப்போதும் போல தனது அதிமேதாவிதனத்தை காட்டும் விதமாக "மெத்த படித்த பல்லி ; கழனி பானையில் விழுந்ததாம் துள்ளி" என்ற அடிப்படையில் புரிதல் இன்றி புராதன சின்னங்கள் குறித்து அமைச்சர் மாபா பாண்டியராஜன்  பேசியிருக்கிறார்.
 
ஒரு பொருளோ, கட்டடமோ நூறு வருடங்களை கடக்கும்போது தொல்லியல் சட்டப்படி அதற்கு புராதன தன்மை வந்துவிடுகிறது. நினைவு சின்னம் வேறு, புராதன சின்னம் வேறு என பேசும் மாபா பாண்டியராஜன் அவர்களுக்கு அடிப்படை புரிதலே இல்லை என்று பழமொழி கூறி கலாய்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்