வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் – தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை !

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (15:59 IST)
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த நினப்பதாக அமமுகவின் முக்கிய தலைவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். இதில் தவறில்லை தங்க தமிழ்செல்வன் எதார்த்தத்தை பேசுகிறார் என டிடிவி தினகரனும் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த அதிமுகவினர் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயலகளை செய்துகொண்டு இருக்கிறார். அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார் என்றே நினைக்கிறேன் என தெரிவித்து சர்ச்சையை உண்டாக்கினர். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் ‘இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். அதன் பிறகு ஆட்சியைக் கலைப்போம். தினகரன் தலைமையில் ஆட்சி அமைய பாடுபடுவோம். அதனால் தோல்வி பயத்தால் அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்சனை செய்ய முயல்வார்கள். அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்