பள்ளிக்கு செல்ல மாட்டோம்.. இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:47 IST)
சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் போராட்டம் நடத்தியவர்களை நேற்று போலீசார் கைது செய்து சமுதாயக் கூடங்களில் வைத்திருந்தனர் என்பதையும் பார்த்தோம்.

மேலும் சமுதாயக் கூடங்களில் கழிவறை குடிதண்ணீர் உட்பட எந்த விதமான வசதியும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ’திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சற்றுமுன்  பள்ளிகளுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் வகுப்புகளை புறக்கணிக்கும் திட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து 20000 இடைநிலை ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஒன்பதாம் தேதி ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள், டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த  அரசு முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்