ஆன்லைன் மொபைல் ஆர்டர்: கோவை ஆசிரியையை ஏமாற்றிய டெல்லி மாணவன்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:40 IST)
ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்த கோவையை சேர்ந்த ஆசிரியை ஏமாற்றி ரூபாய் 29,000 டெல்லி மாணவன் மோசடி செய்துள்ளான்.


 
 
கோவையை சேர்ந்தவர் நிதிநிலேஷ் சுரானா, டூட்டோரியலில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், புதிதாக செல்போன் வாங்க ஆன்லைன் மூலம் வாங்க தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூ.29,000 செல்போன் வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
 
அப்போது அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய ஒரு வாலிபர், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறினார். இதனை நம்பி ஆசிரியை ரூ.29 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் கூறியபடி செல்போனை அனுப்படவில்லை.
 
அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, தான் மோசடி செய்யப்பட்டதை ஆசிரியை அறிந்தார். இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினார்கள்.
 
அப்போது டெல்லியில் இருந்து உஜ்ஜைன் ஜெயின் (22) என்ற கல்லூரி மாணவர் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 
 
பின்னர், இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் பண பரிமாற்றம் நடைபெற்ற வங்கிக்கு தகவல் கொடுத்து ஆசிரியையின் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
அடுத்த கட்டுரையில்