கனமழை நீட்டிக்கும்; பலத்த காற்று வீசும்! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (16:30 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நீலகிரி, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழையும், தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்