கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு: மூன்றாவது இடத்துக்கு வந்த தமிழகம்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:37 IST)
நேற்றுவரை மிக குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்புகளை சந்தித்திருந்த தமிழகம் திடீரென ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு 100 ஐ தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. 241 கொரோனா பாதிப்புகளை கொண்டு கேரளா அடுத்ததாக உள்ளது. கேரளாவில் இதுவரை 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென வேகமாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

நேற்று ஒருநாளில் இந்தியா முழுவதும் 315 கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்