தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா! – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (17:12 IST)
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவிலேயே திரிபடைந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அடுத்த அலை டெல்டா ப்ளஸ் தொற்றால் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் மொத்தமாக 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்